Sunday, March 09, 2008

வணங்கி வழியனுப்புகிறோம்

சென்ற வாரத்தில் இரு தமிழ் எழுத்தாளர்களின் மரணம்..
மரண தேவனுக்கு கதை சொல்ல ஆட்கள் தட்டுப்பாடு போலிருக்கிறது..

நான் ரொம்ப அதிகமாக தமிழ் இலக்கியங்கள்/நாவல்கள் படித்தது கிடையாது.
இருந்தாலும் நான் படித்ததில் பிடித்த ஒரு எழுத்தாளர் சுஜாதா.. எனக்கு அவருடைய எழுத்து நடை மிகவும் எளிதாக, புரியும்படியாக இருக்கும்.. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஒரு மெல்லிய ஹாசியம் ததும்பும். அவருடைய இழப்பைப் பற்றி விஷயம் தெரிந்த நிறைய பேர் எழுதி விட்டார்கள்/ பேசி விட்டார்கள்.

சுஜாதா!! நீங்கள் மறைந்தாலும் உங்கள் எழுத்தால் நீங்கள் பல்லாண்டு காலம்
நீடூடி வாழ்வீர்கள். உங்களால் தமிழ் உலகு கற்றதும் பெற்றதும் அதிகம். உங்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகு என்றும் கடமை பட்டு இருக்கிறது.

அடுத்த மரணம். ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களுடையது. இவருடைய எழுத்தை நான் மிக அதிகமாக படித்தது இல்லை. ஆனால் விகடனில் அவருடைய தற்கொலை பற்றி படித்த போது மிகவும் கஷ்டமாக இருந்தது. வெறும் 10 பேர்தான் மரணத்துக்கு வந்தனர் என்னும்பொழுது இன்னும் கஷ்டமாக இருந்தது. பாரதிக்கே அந்த நிலைமை என்னும்பொழுது ஸ்டெல்லா எம்மாத்திரம். ஸ்டெல்லாவுடைய மனைவியின் மேல் அவர் வைத்து இருந்த பாசம் மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது.

பி.கு.
சுஜாதாவின் வெப்சைட் அட்ரஸ் below. அவருடைய அனைத்து படைப்புகளும் இதில் கிடைக்கும்.
http://www.writersujatha.com/